2021 க்குப் பின்னர் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023

எதிர்க்கட்சி எம்.பி ஒருவரின் கருத்தை நிராகரித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அரச அமைச்சர்களுக்கான வாகனங்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், அரச அமைச்சர்களுக்காக சுமார் 239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தேவையான தண்ணீர் பெளசர்கள், அம்புலன்ஸ்கள் மற்றும் டபல் கெப் வண்டிகள் போன்ற சில வாகனங்கள் மாத்திரமே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அந்த வாகனங்கள் தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யப்படவில்லை எனவும். இதுவரை, 2021 க்குப் பின்னர் நாடு எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்..

மேலும் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணமோ யோசனையோ திறைசேரிக்கு இல்லை, மேலும் நாடு அதிக பொறுப்பான செலவுகளைக் கொண்டுள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான செலவுகளுடன் ஒப்பிடப்பட்டது, என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதைக்கு எந்தவொரு வாகனத்தையும் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: