2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டில் ஒருலட்சம் கடவுச்சீட்டுக்கள் அதிகமாக விநியோகம் – குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தகவல்!

Wednesday, January 5th, 2022

கடந்த 2020 ஆம் ஆண்டை விடவும், 2021 ஆண்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 7695 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 80 ஆயிரத்து 230 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

கொவிற் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றி வந்த 73 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் 10 ஆயிரத்து 576 வெளிநாட்டுப் பிரஜைகள் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 4 ஆயிரத்து 726 இந்தியர்கள் எனவும் 3 ஆயிரத்து 576 பேர் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க

Related posts: