2017 பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, December 5th, 2016

நாட்டில் தற்சமயம் நிலவிவரும் பொருளாதாரப் பின்னடைவு நீங்கி 2017இல் இலங்கை 6.3 சதவிகித பொருளாதார வளர்ச்சியைக் காணுமென இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.

அதன்பின் 2018 தொடக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் 7 சதவீதத்தால் சீராக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வருடம் நாட்டின் திரட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சி 5 தொடக்கம் 5.5 சதவிகிதமாக இருந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரச மற்றும் தனியார்துறையினரின் பங்களிப்புடன் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால் 2020இல் இலங்கையின் தனி நபர் வருமானம் 3,500 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

central-bank

 

 

Related posts: