2017இன் பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கலாம் – மத்திய வங்கி!

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவு நீங்கி 2017இல் இலங்கை 6.3 சதவிகித வளர்ச்சியைக் காணுமெனவும் 2018 தொடக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் 7 சதவீதத்தால் சீராக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
இவ்வருடம் நாட்டின் திரட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சி 5 தொடக்கம் 5.5 சதவிகிதமாக இருந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அரச மற்றும் தனியார்துறையினரின் பங்களிப்புடன் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால் 2020இல் இலங்கையின் தனி நபர் வருமானம் 3,500 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
Related posts:
கடந்த ஆறு மாதங்களில் 2,160 கொள்ளைகள், 217 கொலைகள் 730 க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்!
வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள்!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமனம்!
|
|