20,000 பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் நியமனம் – அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

அரச சேவைக்கு இருபது ஆயிரம் பட்டதாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுதந்திரப் பட்டதாரிகளின் சங்கத் தலைவரும் அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தற்போது அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் பற்றிய கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுகிறது. அதன்படி குறைந்தபட்சம் இருபது ஆயிரம் பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர். போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள். இந்த நியமனங்களின் போது இன, மத, மொழி, ,அரசியல் வேறுபாடுகளின்றி திறமை அடிப்படையிலேயே தெரிவுகள் நடைபெறும் என்றார்.
Related posts:
பேஸ்புக் inbox கண்காணிக்கப்படுகிறது - மஹிந்த தேசப்பிரிய!
சீனாவிடம் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கோரியுள்ளது இலங்கை - சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன!
மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!
|
|