மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!
Thursday, September 9th, 2021
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஒருவார காலத்திற்குள் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளதால் என்னை மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!
பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் - பேருந்து...
புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு - ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி ம...
|
|
|


