19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்!
Wednesday, September 11th, 2024
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமது அமைப்பு சிறப்பு ஆய்வொன்றினை நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும், சிலர் கட்சி அலுவலகங்கனை கூட அமைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 38 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் தற்போது பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது கொள்கைகளை முன்வைத்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில வேட்பாளர்களை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகங்களூடாக சிறப்பு திட்டம் - அமைச்சர் ஷேஹான் சேம...
தொடர்ந்தும் மின்வெட்டு - நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழ...
உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு!
|
|
|


