நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகங்களூடாக சிறப்பு திட்டம் – அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021

நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை செலுத்துவதற்காக மாவட்ட செயலகங்கள் மூலம் ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில. அவர் மேலும் கூறுகையில் –  

பலர் தனியார் நிறுவனங்களிடமிருந்து 25 முதல் 30 வட்டி வீதத்தில் நுண்நிதிக் கடன்களை வாங்கியவர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த கடன் தொகையை செலுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் ஊடாக கடன் பெற்றவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என்றும் அதற்கு 6 வீத வட்டி அறவிடப்படும் என்றும் தெரிவித்தள் அமைச்சர் ஷேஹான் சேமசிங்க குறித்த பணத்தை மாவட்ட செயலாளருக்கு தவணை பணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடனாளியிடம் ஒப்படைக்காமல், கடன் பெற்ற நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு இலட்சம் ரூபா கடன் வரம்பை மேலும் அதிகரிக்க ஜனாதிபதி செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் அடுத்த வாரம் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஷேஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: