மாமரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் படுகாயம்
Monday, May 15th, 2017
வீட்டின் மாமரத்தில் மாங்காய் பிடுங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தரொருவர் மாமரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். .
குறித்த சம்பவம் சனிக்கிழமை(13) காலை-10 மணியளவில் யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா விஜயகுமார்(வயது- 50) என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த குடும்பஸ்தர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாற்று வழி வேண்டுமென்று கோரிக்கை!
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு – எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் நடைமு...
அஸ்வெசுகம நலன்புரி திட்டம்“ - வங்கி கணக்குகளை திறக்க முந்தியடிக்கும் மக்கள் – சில இடங்களில் அமைதியின...
|
|
|


