வெதுப்பக கிணற்றுக்குள் இறந்த நிலையில் நாய்: வெதுப்பகம் மூடப்பட்டது – நெல்லியடியில் சம்பவம்!
Wednesday, December 14th, 2016
நெல்லியடி நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் கிணற்றுக்குள் நாயொன்று இறந்த நிலையில் காணப்பட்டதால் அந்த வெதுப்பக உற்பத்திகள் அனைத்தையும் அழித்த சுகாதாரப் பகுதியினர் வெதுப்பகத்தையும் மூடுமாறு பணித்துள்ளனர்.
கிணற்றுக்குள் நாய் காணப்பட்ட விடயம் தொடர்பாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ்குமார் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவரும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரும் வெதுப்பகத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் அழித்தனர். வெதுப்பகத்தை மூடுமாறு கூறிய அவர்கள் மறு அறிவித்தல் வரை அங்கு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்தனர் இதேவேளை, தங்களுடன் தனிப்பட்ட விரோதமுடைய சிலர் அந்த நாயைக் கொன்று விட்டு கிணற்றில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று வெதுப்பக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:
காலநிலை தொடர்பில் முக்கிய எச்சரிக்கை!
மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை தேடிக் கண்டுபடியுங்கள் - வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு ஜனாத...
ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது - இராஜாங...
|
|
|
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விரைவில் அறிவிப்பார் - பொலிஸ் ஊடகப் பேச்...
கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு...
ஐந்து வருடங்களாக தேங்கி கிடக்கும் வாகன கொள்வனவு உரிமங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன!


