கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021

நாட்டின் கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் – நிரல் அமைச்சுக்கள் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறையின் பிரதிநிதிகளுக்கிடையில் ஒழுங்கான ஓர் ஒருங்கிணைப்பு இன்மையானது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் செயன்முறை்என்பவற்றில், பிரச்சினைகளும் தேவையற்ற தாமதங்களும் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த  தரப்பினர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்திற்கு அமைய – கைத்தொழில்கள் தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பதற்கு முடியும் என்ற போதிலும், இதுவரை அதுதொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அந்தவகையில் கைத்தொழில் துறையின் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான புதிய சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி, 1990ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த திருத்தங்கள் உள்வாங்கப்படும் வரை – 20 முதன்மைக் கைத்தொழில் துறைகளின் வர்த்தக சபை மற்றும் சம்மேளனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறையின் நிபுணர்களை உள்ளடக்கி ஆலோசனை சபை ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி உடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: