அரைகுறையாக காணப்படும் நீர்பாசன வாய்க்கால்கள் – பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்!

Thursday, December 15th, 2016

 புனரமைப்பு பணிகளை ஒப்பந்தக்காரர்கள் குறித்த காலத்தினுள் மேற்கொள்ளாமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இரணைமடு களத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்கள், மதனுகள் பாலங்கள், வீதிகள், கழிவு வாய்க்கால்கள் என்பன இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த பணிகள் சிறுபோக செய்கைக்காக நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்னமும் நிவர்த்தி செய்யப்படாதுள்ளது. இதனைவிட நீர்ப்பாசன வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமாணப்பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத நிலையிலும் காணப்படுகின்றது. இதனை கமக்கார அமைப்புக்கள், விவசாயப் பிரதிநிதிகள் கவனிக்காமல் அலட்சியமாகவுள்ளனர்.

புனரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்கள் பயன்படுத்தாமல் குழிகளாக காணப்படுகின்றது. இந்நிலையில் தற்பொது பருவமழை பெய்யாத நிலையால் இரணைமடுக் குளத்து நீர் பயிர்ச்செய்கைக்காக திறந்து விடப்பட்ட போதிலும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாத நிலைக்கு உட்பட்டுள்ளனர். குளத்து நீர் ஒரு வாரகாலமாக திறந்து விட்டப்பட்ட போதிலும் சில இடங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றும் புனரமைப்புப் பணிக்குள் அதிக குறைபாடுகள் காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

unnamed__10_

Related posts: