ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தீர்மானம்!

Wednesday, April 1st, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே  அமைச்சர் இதனை கூறினார்.

இதேவேளை குறித்த செய்தியாளர் சந்திப்பில் இணைந்துக்கொண்ட அமைச்சரவையின் இணை பேச்சாளர் பந்துல குணவர்தன மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் போது பல்கலைக்கழக விண்ணப்பங்களுக்காக மாணவர்களுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடடார்.

இதேவேளை கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்பதோடு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்..

Related posts:

கோண்டாவில் அமரகவி மாதர் சங்கதிதிற்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி வழங்க...
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி - ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!
பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட...