16 வாரங்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

நாட்டில் 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 812 பேர் கொரோனாத்தொற்றி லிருந்து குணமடைந்துள்ளனர்.
அதனடிப்படையில் இது வரை 4 இலட்சத்து 55 ஆயிரத்து 344 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந் துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
00
Related posts:
அச்சுறுத்தலான சூழ்நிலையை மக்கள் கவனத்தில் கொள்ளாது செயற்படுகின்றனர் - சுகாதார அமைச்சு குற்றச்சாட்டு!
அரச ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க நடவடிக்கை - அமைச்சர் டலஸ் அழகப்பெ...
மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் - ரஷ்ய அதி...
|
|