133 பொருட்களுக்கும் 21 சேவைகளுக்கும் ‘வற்’ தவிர்ப்பு!

Thursday, July 7th, 2016

அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் (பெறுமதி சேர் வரி) உள்ளடக்கப்படமாட்டாது என்று தெரிவித்த அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அசாதாரண முறையில் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப்(06) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘அத்தியாவசியப் பொருட்களில் பலவற்றின் விலைகள் அசாதாரண முறையில் அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் நியம விலைகள், இரண்டு வாரத்துக்கு ஒருதடவை, ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: