13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்த பிக்குகள் தெரிவிப்பு!
Tuesday, February 7th, 2023
13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.
பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் 27 இளைஞர்க...
ஜே.ஆர். ஜயவர்தனவின் புதல்வர் காலமானார்!
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் - அரசாங்க அச்சுத...
|
|
|


