12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவிருத்தி வங்கி!

12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு குறைவாக பயிர்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் பயிரிடும் விவசாய குடும்பமொன்றுக்கு 20,000 ரூபாவும் மானியமாக வழங்கப்படும்.
அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த பணம் வைப்பிலிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முறைகேடுகளை தடுக்கவே சீருடைகளுக்கு பதிலாக வவுச்சர் திட்டம்! - அமைச்சர் அகிலவிராஜ்!
தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்!
திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000 ரூபா தண்டம்!
|
|
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரான்ஸ் கிளையினரால் முல்லைத்தீவில் விளையாட்டுக் கழத்திற்கு விளையாட்டு உபகர...
ஐ.நா. ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டு - இலங்கையை வலுவாக ஆதரிப்போம...
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...