10,000 இலங்கையர்களுக்கு பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Thursday, March 16th, 2023
இலங்கை பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு 10,000 வேலை வாய்ப்புகளுக்கான ஒதுக்கீடுகளை மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, மலேசிய அரசாங்கத்தால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட 10,000 வேலைவாய்ப்புகளுககு மேலதிக ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகவே இந்த புதிய தொழில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், எதிர்காலத்தில் மாதாந்தம் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டுப் பண அனுப்பலை இலக்காக கொண்ட திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!
அரசாங்கத்திடம் பணமில்லாவிடின் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முட...
அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு - இது நாட்டுக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என...
|
|
|


