10 மாவட்டங்களுக்கு சுகாதார தரப்பினரால் மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Tuesday, May 26th, 2020
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனவரிமுதல் மார்ச் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தப்பி ஓடிய இராணுவச் சிப்பாய்களுக்கு சட்ட நடவடிக்கை!
விமலின் கறுப்புக் கொடி விவகாரம் மறுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி
வாரத்தில் மூன்று தடவை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை - வர்த்தக...
|
|
|


