10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு – ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அடுத்த மாதம் முதல்வாரம் மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன் இலங்கை வருகை!

Friday, September 23rd, 2022

10 ஆயிரம் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு, மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக, அடுத்த மாதம், முதல்வாரத்தில் மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் இலங்கை வரவுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பேஸ்புக் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கான ஒப்பந்த காலம், வேதனம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும், உள்ளடக்கிய ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் சந்தர்ப்பத்தில் முடிவு செய்யப்பட உள்ளன.

தமது கோரிக்கையின்படி, இலங்கைக்கான மலேசியத் தூதர் டான் யாங் தாய், தம்மை சந்தித்து, மலேசியாவில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: