10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்து!
Wednesday, May 8th, 2024
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும் மின்சார சபை அதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மூன்று நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு காட்டுங்கள் - GMOA இற்கு சுகாதார அமைச்சர் சவால்...
மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழை...
|
|
|


