07 மாதங்களில் 23 வீதத்தால் அரச வருமானம் அதிகரிப்பு!

Saturday, August 20th, 2016

நடப்பு ஆண்டின் கடந்த 07 மாதங்களுக்குள் அரசின் வருமானம் நூற்றுக்கு 23 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தள்ளார்..

வரி வசூலிக்கும் அரசாங்கத்தின் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்க திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் ஆகியவற்றின் வருமான நிலையை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, ஓப்பீட்டளவில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டின் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த 07 மாதங்களுக்குள் இந்த மூன்று திணைக்களங்கள் மூலமாகவும் 07 இலட்சத்து 69,752 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது கடந்த ஆண்டு 06 இலட்சத்து 25,867 மில்லியன் ரூபாவாக இருந்துள்ளது.  அதன்படி இந்த ஆண்டு 01 இலட்சத்து 43,885 மில்லியன் ரூபாவால் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கலால் திணைக்களத்தின் ஆரம்ப 07 மாதங்களின் வருமானம் 03 இலட்சத்து 76,994 மில்லியன் ரூபா என்பதுடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 02 இலட்சத்து 42,811 மில்லியன் ரூபா என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.  கலால் திணைக்களம் மூலம் 69,326 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்

Related posts: