2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை வலுவூட்டுவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
நாளை யாழ் .போதனா வைத்தியசாலை தாதியர்கள் சேவைப் புறக்கணிப்பு!
வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் - பெப்ரல் அமைப்பு!
கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண பீ.சீ.ஆர். முறைமையே சிறந்தது - அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரத...
|
|