10 பேருடன் மட்டும் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி !

Saturday, November 23rd, 2019


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ஆம் திகதி முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்லவுள்ளார்.

இந்த விஜயத்திற்கு 10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எந்தவொரு அமைச்சரவை அமைச்சரையும் இந்த விஜயத்திற்கு அழைத்து செல்லாமல் இருப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நிதி, பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் செயலாளர்கள் உட்பட 10 அதிகாரிகள் மாத்திரமே தன்னுடன் அழைத்து செல்ல ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பிற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: