10ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் – மஹிந்த தேசபிரிய!
Monday, September 2nd, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறிப்பிட்ட அந்த திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நவம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொல்பொருள் தகவல் நிலைய நிர்மாணப்பணிகள் குறித்த கலந்துரையாடல்!
இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது!
உள்ளூராட்சித் தேர்தலில் 80,672 பேர் போட்டி - கம்பஹாவில் மட்டும் 7,530 யாழ்ப்பாணத்தில் 4,122 களத்தில்...
|
|
|


