எரிபொருளை அடுத்து பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்!
Wednesday, March 13th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கான பொருத்தமான தீர்வை காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் கடைப்பிடித்தல் விதிகளை கவனத்தில் கொண்டு நுகர்வோருக்கும் அரசாங்கத்துக்கும் பால்மா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெறுபேறு கிடைக்கும் வகையில் இறக்குமதி பால்மாவிற்கு விலை சூத்திரமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை சூத்திரத்தை நுகர்வோர் அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
காவற்துறை அதிகாரிகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிருப்தி !
எதிர்வரும் திங்களன்று ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை விஜயம் - கொவிட் தொற்றுக்குப் பிந்திய பொருளா...
|
|
|


