கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் 2016

Saturday, August 6th, 2016

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 31 வது ரியோ ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இனிதே ஆரம்பித்துள்ளது.

உலகெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் இதனை பார்ப்பதற்காக ஜெனிரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் ஆவலுடன் குவிந்துள்ளனர்.3 பில்லியன் மக்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள் என விளையாட்டு துறை அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இதில், பிரேசிலின் பாரம்பரிய சம்பா நடனம், சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது.6 ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக வெவ்வேறு டிசைன்களில் 12 ஆயிரம் உடைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் மாடல் ஜிஸ்லி புன்ட்ச்சென், இங்கிலாந்து நடிகையும், எழுத்தாளருமான ஜூடி டென்ச், திருநங்கை மாடலான லா டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர்

Related posts: