அரிசி விலை குறைக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Saturday, February 4th, 2017
அரிசி விலை தொடர்பாக அசௌகரியத்திற்கும் உள்ளாகும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் குறைக்கப்பட்ட அரிசி விலைகளை இதுவரை வர்த்தகர்கள் அமுல்படுத்தவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தகர்கள் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் 65 ரூபா தொடக்கம் 70 ரூபாவரையான விலையில் நாட்டரிசி கிலோவொன்று விற்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.  ச.தோ.ச விற்பனை நிலையங்களில் நாட்டரிசி கிலோவொன்று 76 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகையை பொதுமக்களிடம் பெற்றுக்கொடுப்பது வர்த்தகர்களின் கடமை என அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

sarath-amunugama

Related posts: