வரிசெலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி – கல்வி அமைச்சு!
Thursday, August 22nd, 2019
வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கத்துக்கு வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொள்ள கல்வி அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது.
அவ்வாறான பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான புதிய வரையறைகளை உருவாக்கும் செயற்பாட்டில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
Related posts:
சாரதிகளின் கண் பார்வையைப் பரிசோதிக்கத் திட்டம்!
மேலும் சில மானியங்களை மார்ச் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானம் - போக்குவரத்து அமைச்சரின் யோசன...
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் - எச்சரிக்கும் சுகாதார தரப்பு!
|
|
|


