இந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு வருகை!

Monday, December 26th, 2016

கொழும்பு துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப் பொருள் தொகை தொடர்பாக நடத்தப்படும் அடுத்த கட்ட விசாரணைகளுக்காக இந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேடி அறிய இந்திய பொலிஸார் அடங்கிய குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்ததாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் கூறியுள்ளது.

ஈக்குவடோர் நாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த கொக்கேய்ன் போதைப் பொருள் தொகையின் பெறுமதி சுமார் 12 பில்லியன் ரூபா எனவும் அந்த கப்பல் இந்தியாவை நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்தது.

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப் பொருள் இந்தியா ஊடாக வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், இந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என போதைப் பொருள் தடுப்பு பணியகம் கூறியுள்ளது.

96_IMG_0756(1)

Related posts: