யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை – பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்!
Friday, January 3rd, 2020
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
கண்டி – கொழும்பு மத்திய அதிவேக வீதி 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுவதுடன் இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேக நெடுஞ்சாலையும், குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார் அமைச்சர் பைஷர் முஸ்தப்பா!
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பில் விசேட கூட்டம்!
இலங்கையின் சுகாதார சேவையை குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு!
|
|
|


