கச்சதீவுத்திருவிழாவில் பொலித்தீனுக்குத் தடை – யாழ் அரச அதிபர் !

Saturday, February 3rd, 2018

வரலாற்றுச் சறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 23ஆம் , 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது இம்முறை 6அயிரத்து 500 பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது அங்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு யாழ் யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன்; தெரிவித்தார் கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை நடை பெற்றது அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-கச்ச தீவில் இம்முறை இலங்கையில் இருந்து 6500பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2500 பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது

திருவிழாவுக்கான ஒழுக்களுக்குரிய பிரதான பொறுப்பை கடற் படையினர் ஏற்றுள்ளனர் அதே போன்று ஏனைய துறையினர் எற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொரிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எதிர்பரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையான பஸ் சேவைகள் அதிகாலை 4மணியில் இருந்து பிற்பகல் 2மணிவரை நடை பெறும் படகுச் சேவைக்கான ஒரு வழிக்கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கு ஒருவழிக்கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளது

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்படட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளன பயணிகள் பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன 200 பொலிஸார் சேவைகள் ஈடுபடவுள்ளனர் பயணிகள் படகுச் சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும்  ஆலயத்துக்குச் செல்லும் பக்கர்கள் பொலித்தீன் மற்றம் பிளாஸ்ரிக் மற்றம் பொலித்தீன் பொருள்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார் .

Related posts:

அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ...
பொதி உறை அல்லது கொள்கலன் மீது சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் - நுகர்வோர் விவக...
மண்ணெண்ணெய் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் - அமைச்சர் கஞ்சன...