மழையுடனான காலநிலை: டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டின்
பல்வேறு பாகங்களில் நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக
தொற்றுநோய்கள் தவிர்ப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான
சூழல்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என்றும் அந்தப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்த
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48 ஆயிரத்து 900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களுள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பு
மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 125 என தொற்று
நோய்கள் தவிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல்: உங்கள் வயதான பெற்றோர்களுக்கு தெளிவூட்டுங்கள் – ஜனாதிபதி!
பொலிஸாரின் அனைத்து விடுமுறைகளும் இரத்து !
ரணிலுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப...
|
|