ரணிலுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Tuesday, July 25th, 2023

பொலிஸ் அதிகாரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கும் 22 ஆம் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிவித்துருஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் உதய கம்மன்பில இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இது தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்தி கொள்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியினால் சர்வக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலான விடயம் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய அரசியலமைப்புக்கு அமைய பிராந்திய அரசாங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயற்படுமாயின் அந்த விடயத்தில் தலையிடுவதற்கு இந்திய மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் கொண்டு வரப்பட்டுள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தில் சில சந்தர்ப்பங்கள் தவிர்ந்த விடயங்களில் மத்திய அரசு எதிராக செயற்படுவோரை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கப்படவில்லை.

இதன்படி, காவல்துறை அதிகாரம் அரசியலமைப்பு பேரவையில் உள்ளமையானலேயே தமிழ் கட்சிகளை அழைத்து ஜனாதிபதி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.

எனவே பொலிஸ் அதிகாரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கும் 22ஆம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: