மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி – அமைச்சர் மஹிந்த அமரவீர!

மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய மன்னாரில் இயற்கை எரிவாயுவிற்கான அகழ்வு நடவடிக்கையை வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் கடற்படுக்கையில் 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கஜாப்புயலால் நிறுத்தப்பட்ட தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 27 இல்!
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 21 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்!
உறவுகளை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின் முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற...
|
|