மதுபான போத்தல்களில் போலி முத்திரைகள் : நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிகர்களை பதித்த மதுபான நிறுவனங்களுக்கு எதிராக தற்போது வரையில் 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுலா அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக மது விற்பனைக்கான அனுமதி பத்திரங்களை வழங்குவது தொடர்பிலேயே குறி;த்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதற்கமைவாக தற்போது வரையில் 538 அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வித வேறுபாடும் இன்றி சுற்றுலா அனுமதிபத்திரம் உடைய ஒருவருக்கு இந்த மது விற்பனைக்கான அனுமதி பத்திரம் ஒன்றை அவர்களின் வியாபார ஸ்தலங்களுக்கு கோர முடியும்.

பாதுகாப்பான ஸ்டிகர்களுடன் சந்தேகத்திற்கிடமான சுமார் ஒரு இலட்சம் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. அதில் 180 மில்லி லீட்டர் கொண்ட 43 ஆயிரத்து 776 போத்தல்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு போலி மதுபானம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எவரும் விடுதலை செய்யப்படவில்லை.

உறுதிப்படுத்தப்பட்டுள்ள போலி மதுபான போத்தல்களுக்கு தற்போது உறுதிசெயப்பட்டுள்ள சட்டரீதியான ஸ்டிக்கர் பயன்;பாட்டிற்காக நேற்று வரையில் 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி வரையில் மாத்திரமே அவர்களுக்கு தண்டப்பணம் செலுத்தவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆகவே இந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித மன்னிப்பையோ சாதாரணத்தையோ பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: