உள்ளூட்சித் தேர்தலில் பவ்ரலின் 7000 பேர் கண்காணிப்புப் பாணியில் – 350 வாகனங்களும் சேவையில்!

Friday, February 2nd, 2018

உள்ளூட்சித்  தேர்தலுக்காக பயிற்றவிக்கப்பட்ட 7000 கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பவ்ரல் ) அமைப்பின் தெசிய அமைப்பாளர் சுஜீவ தெரிவித்தார்

இது குறித்து நேற்று புதன் கிழமை பவ்ரல் நிறுவனத்தின் தலமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில் எதிர்வரும் உள்@ராட்சித் தேர்தல் கடந்தகால தேர்தலை விட முற்றிலும் மாறுபட்ட புதிய விதிமுறைகளுடன் இடம்பெறவுள்ளது எனவே இத் தோதல் சிறப்பான முறையில் நடைபெறும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இத்தேர்தலால் எவ்வித முறைகேடுகளுமின்றி சிறந்த தேர்தல் முறையாக இடம்பெற பவ்ரல் சார்பாக பயிற்றப்பட்ட 7000 கண்காணிப்பாளாகள் தற்போது தற்போது வரை கண்காணிப்புப் பாணியில் ஈடுபட்டுள்ளனர்

இவற்றில் ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கடந்த 25,26ஆம் திகதிகளில் இடம்பெற்ற தபால்மூல வாக்கெடுப்பு நிலைய கண்காணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளனர். மேலும் நாலாயிரம் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 10ம் திகதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையங்களில் நிலைய கண்காணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளனர் இவர்கள் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்று தேர்தல் வன்முறை தொடர்பான விழிப்புனர்வு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று முன்னூற்றைம்பது வாகனங்கள் மூலம் ஜந்நூறு கண்காணிப்பாளர்கள் நடமாடும் சேவையில் ஈடுபடவுள்ளனர் எனவே இத்தேர்தல் சிறந்த முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: