பரவும் நோய் தொடர்பில் சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு!

தற்போது பரவிவரும் காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரசால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்லவெனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ப்ளுவென்சா நோய் பரவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் சுகாதார அமைச்சினால் வெளயிடப்பட்ட ஒன்று அல்லவென்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பருவப்பெயர்ச்சி மழையுடன் இன்ப்ளுவென்சா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் குறைந்தளவிலான நோயாளர்களே பதிவாகியிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பு - யாழ் மாநகரின் பாதீடு இரண்டாவது தடவைய...
டெங்கு காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|