பதவி உயர்வை வழங்குவதற்காக அகிலவிராஜ் காரியவசம் அறிவுத்தல் விடுத்திருந்தார்!

Saturday, August 10th, 2019

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அரசியல் ரீதியாக 10 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வை வழங்குவதற்காக தனக்கு அறிவுத்தல் விடுத்திருந்தார் என அமைச்சின் பணிப்பாளர்களுள் ஒருவரான ஐ.எம்.கே.பீ இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் சாட்சியமளித்தபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, அரசியல் ரீதியாக தனக்காக செயற்பட்ட ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேரின் பெயர்ப்பட்டியலை வழங்கி, அவ்களுக்கு பதவி உயர்வு வழங்குமாறு கல்வி அமைச்சர் தனக்கு அறிவுறுத்தியிருந்தார் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: