தென்னைச் செய்கைக்கான மண் ஆராய்ச்சி நிலையம் பளையில் – தென்னை பயிர்ச் செய்கைச் சபை!

Wednesday, September 26th, 2018

வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களை நடுகை செய்ய கூடிய மண்ணை ஆராய்ச்சி செய்யும் நிலையம் பளை பிரதேசத்தில் அமையவுள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கைச் சபை தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் தென்னை முக்கிய பயிராக உள்ளது. ஆகவே அதனை நடுகை செய்யும்போது மண்ணின் தன்மை அறியப்படாது விட்டால் தென்னை மரம் வளராது அல்லது மரம் வளர்ந்தும் காய்க்காத நிலை காணப்படும். சில மண் வகைகள் வெவ்வேறு வகையான மூலக் கூறுகளைத் தன்னகத்Nது கொண்டிருக்கும்.

அதனால் தண்ணீர் அதிக உறைதல் நிலைமை காணப்படும். ஆகவே மண்ணின் தன்மை பரிசீலிக்கப்பட்டு அதன் பின்னர் தென்னைகளை நடுகை செய்தால் பயன்கள் கிடைக்கும். வருடம் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் பயிரிடப்படுகின்றன. ஆகவே இதனைக் கருத்திற்கொண்டு பெருந்தோட்டத் துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் லுணுவில பகுதியில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பு வருட இறுதிக்குள் பளைப் பிரதேசத்தில் மண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்படும். இதன்மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: