11 இலட்சம் பேர் புதிதாக சமுர்த்தி கொடுப்பனவுக்காக விண்ணப்பம்!

Sunday, August 7th, 2016

சமுர்த்தி உதவிக் கோரி 11 இலட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த புதிய விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 14 இலட்சம் பேர் சமுர்த்தி உதவிகளை பெற்றுக் கொள்கின்றனர். இவர்களின் ஆவணங்களை மீள்பிரிசீலனை செய்யும் நடவடிக்கை உலக வங்கியின் தொழிநுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீள்பரிசீலனையின் பின்னர் சமுர்த்தி உதவிப் பெறுவோரின் பெயர் பட்டியல் கிராம சேவகர் அலுவலகத்தில் காட்சிப் படுத்தப்படும் என சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பெயர் பட்டியல் மீதான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உரிய தரவுகளின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் பெயர்பட்டியல் அறிவிக்கப்படும் என சந்திரா விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: