பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Tuesday, August 17th, 2021

கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையின் விளைவாகவே தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இன்று நள்ளிரவுமுதல் மறுஅறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: