பலாலிவிமான நிலையம் மயிலிட்டித் துறைமுகத்தின் விஸ்தரிப்புப் பணிகளுக்காகப் பொதுமக்களின் நிலங்களைச் சுவீகரிக்கும் எண்ணம் இல்லை: மீள்குடியேற்ற அமைச்சர் டி .எம்.சுவாமிநாதன்

Saturday, March 5th, 2016

வலிகாமம் வடக்குப் பகுதியில்  பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புப் பணிகளுக்காகப்  பொதுமக்களின் நிலங்களை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி .எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

கோப்பாய்- செல்வபுரம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டப் பணிகளை இன்று வெள்ளிக்கிழமை (04-01-2016) அமைச்சர் பார்வையிட்டார்.பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பாகக்  கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில்  போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க முயற்சிக்கிறோம். இதில் மக்களுடைய காணிகளை எடுக்கப்போவதில்லை. மாறாக இருக்கும் விமான நிலையத்தையே விஸ்தரிக்கவுள்ளோம் என்றார்.

இதன் போது வலி.வடக்கு முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கேட்டபோது,

முகாம் மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை என்னால் நிறுத்த முடியாது. அந்த மக்கள் தங்கள் காணிகள் எங்குள்ளது என கூறினால் அவற்றை பெற்றுக் கொடுக்கலாம். குறித்த  மக்களுடைய காணிகள்  படையினர் வசம் உள்ளது என கூறியபோது அது எனக்குத்  தெரியாது. அதைப்பற்றி நான் பேசவில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts: