நிறைவேற்றதிகாரத்தை இரத்து செய்யக் கூறுவது நகைப்புக்குரியது – ஜனாதிபதி!

Sunday, September 22nd, 2019


நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம், பிரதமரின் விருப்பப்படியே கூட்டப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் மாவட்ட சம்மேளனத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுளார்.

அத்துடன் கடந்த வியாழக்கிழமை அமைச்சர் ரவி கருணநாயக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்ததால் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுவதெனில், பிரதமர் கோரிக்கை விடுக்க வேண்டும் என தாம் ரவி கருணாநாயக்கவிடம் கூறியபோது அவர் மௌனமாயிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தாமே ரணிலுக்கு அழைப்பை ஏற்படுத்தி, அவசர அமைச்சரவையை கூட்ட வேண்டுமா என கேட்போது அவர் ஆம் என பதிலளித்ததாகவும், அதற்கு அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு பற்றிய ஆவணத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை அலுவலகத்திற்கு பிரதமர் ஒரு குறிப்பை அனுப்பியதாக அமைச்சரவை அலுவலக செயலாளர் தன்னிடம் அறிவித்த நிலையில் பிற்பகல் 3.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதன்பின்னர், அமைச்சரவைக்கு அந்த ஆவணத்தை அனுப்ப வேண்டாம் என பிரதமர் அமைச்சரவை செயலாளரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தத்தில், நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது குறித்து பிரதமரின் சுருக்கமான கருத்துக்கள் முடிவடைந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஆகியோரிடமிருந்து கடும் ஆட்சேபனைகள் எழுந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றதிகாரத்தை இரத்து செய்யக் கூறுவது நகைப்புக்குரியது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: