கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்தனர்!
Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.
இந்தநிலையில், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்து, கலை, கலாசாரத்துக்கென பல்கலையில் தனியான வளாகம் - வடக்கு ஆளுநர் !
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய...
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலையத்தில் பதிந்து நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமா...
|
|
|


