தொழில் வல்லுனர்களுக்கு அரச நிறுவனங்களில் பதவி – கோட்டாபய ராஜபக்ஷ!

Friday, November 1st, 2019


எதிர்காலத்தில் அமையவுள்ள தனது ஆட்சியில் தொழில் வல்லுனர்களை தவிர வேறு எவருக்கும் அரச நிறுவனங்களில் பதவிகளை வகிக்க வாய்பளிக்கபோவது இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டுசரியான நோக்கம் வேலை செய்யும் நாடுடு என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்ட மற்றுமொரு பிரச்சார கூட்டம் இராஜகிரிய மேம்பாலம் அருகில் இடம்பெற்றது.

இந்நிலையில் புத்தளம் அறுவக்காடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்காக அந்த பகுதி தேரர்களும் சிவில் அமைப்பின் பிரதநிதிகளும் இன்று கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.

நுகேகொட, மிரிஹான பகுதியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதேவேளை, தனது பிரச்சார கூட்டங்களின் போது காபன் வாயு பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்காக மரங்களை நடவும் கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பங்கேற்புடன் இன்று ஒரு மர கன்று நடப்பட்டது.

Related posts: