12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!
Friday, January 21st, 2022
12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை - அமெரிக்கா முக்கிய கலந்துரையாடல்!
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி - மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதின...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் - வர்த்தமானி வெளியிடப்பட...
|
|
|


