இலங்கையின் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள மினுவாங்கொட – 8000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, October 7th, 2020

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மேலும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அண்மித்த பகுதிகளில் சுமார் 4,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தொடர்பாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: