தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் – மஹிந்த தேசப்பிரிய !
Thursday, October 17th, 2019
நடைபெறவுள்ள ஜனதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 18ம் திகதி பகல் வேளையிலேயே வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 18ம் திகதி பகல் வேளையிலேயே வெளியிட முடியும். இம்முறை தேர்தலில் வாக்குச்சீட்டு மிக நீளமாக இருப்பதால் வாக்கு கணக்கெடுப்பின் போது அதிக நேரம் செலவாகும். எனவே இறுதி முடிவினை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்படும்.
இதேவேளை, எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஒரு மாகாணத்திலாவது இலத்திரனியல் முறைமையில் வாக்கெடுப்பு நடத்தி ஒத்திகை பார்க்க வேண்டும்.
அதற்காக தற்போது இந்தியா மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
Related posts:
|
|
|


