அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, October 11th, 2020

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராத உயர் தரப்பரீட்சை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவதற்கான அனைத்து  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் 12 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் உயர் தர பரீட்சாத்திகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக அந்த நிலையங்களுக்கு அருகில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாளைஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது

இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இன்று இடம்பெற்று முடிந்துள்ளது.

பரீட்சை நிறைவடைந்ததும் பரீட்சை மண்டபங்களில் இருந்து உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

9.30 க்கு ஆரம்பமான 5 ஆம் தரபுலமை பரீசில் பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பரீட்சாத்திகள் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த பரீட்சையானது நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது.

கொவிட் 19 தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 12 விசேட பரீட்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் முகாம்கள் மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக குறித்த 12 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு பரீட்சைகள் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: